காட்டாற்று வெள்ளம்... சாலை துண்டிப்பு... கயிற்றை பிடித்து ஆபத்தான பயணம் தொடரும் கிராம மக்கள்!
தர்மபுரி மாவட்ட பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல நாள்களாக இடைவிடாத கனமழை பெய்ததால், சித்தேரி, கலசப்பாடி, அரசநத்தம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. குறிப்பாக கலசப்பாடி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக, அப்பகுதிக்கு செல்லும் மலைச்சாலை முழுவதும் துண்டிக்கப்பட்ட நிலையில், கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

வெள்ளம் அடித்துச் சென்ற சாலை காரணமாக மாணவர்கள் பள்ளி செல்லவும், தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவும் முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆற்றை கடக்க முடியாத நிலையில், சிலர் தற்காலிகமாக மரக்கொம்புகளை ஏணிபோல் அமைத்து, கயிற்றை கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். இந்த ஆபத்தான பயணம் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்காலங்களில் இதே நிலை வருடா வருடம் தொடருவதால், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாள் முன்பே வலுத்திருந்தது. தற்போது அந்தப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தாலும், வெள்ளத்தால் மக்கள் அவதிப்படும் சூழல் மாறாததால், பாலப்பணிகளை விரைவாக முடிக்க மாநில அரசு தலையிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
