2 மகள்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கொடூரத் தந்தை - தூக்கிலிடக் கோரி கிராம மக்கள் மனு!

 
கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கல்குவாரித் தொழிலாளி ஒருவர், தனது 13 மற்றும் 10 வயது மகள்களைப் பள்ளிக்குச் செல்ல விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர்.

பாலியல்

சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் (45) என்ற தொழிலாளி, குடிபோதைக்கு அடிமையாகி, வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், தனது இரண்டு மகள்களையும் திடீரெனப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே சிறை வைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற அந்தச் சிறுமிகள், தங்களை, தங்கள் தந்தையே குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், இது வெளியே தெரிந்துவிடும் என்பதால் பள்ளிக்கூடத்திற்கு விடாமல் சிறை வைத்திருப்பதாகவும் ஆசிரியர்களிடம் கூறி அழுதனர்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து கிராம மக்களும் ஆசிரியர்களும் மஞ்சுநாத்தின் தாயிடம் புகாரைத் தெரிவித்தபோது, இதற்கு முன்பு மஞ்சுநாத் தன்னையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், தான் கத்தி கூச்சலிட்டதால் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் கூறி அவரும் கதறி அழுதார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

இதைக் கேட்டு கொதித்து எழுந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு, சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்த மனுவில், "மஞ்சுநாத் தான் பெற்றெடுத்த இரண்டு குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் தனது தாயையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். இதனால் எங்கள் ஊரின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மஞ்சுநாத்தைக் கைது செய்து தூக்கில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொடூரச் செயலில் ஈடுபட்ட மஞ்சுநாத்தை நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். இந்தக் கொடூர விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!