விழுப்புரம் மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட்!! கள்ளச்சாராய வழக்கு எதிரொலி!!

 
கள்ளச்சாராயம் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  உயிரிழப்பு  குறித்த வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும். இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யப்படுவர் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. அத்துடன் கே.எஸ்.அழகிரி இச்சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காளிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்ட எஸ்பி

இதில் சிகிச்சை பலனின்றி இதுவரை 2 பெண்கள் உட்பட 9  பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணையில் கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.  கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பணி இடை நீக்கம்

கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து  காவல்துறையினர் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். . 88 கள்ளச் சாராய வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு  226 லிட்டர் சாராயம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் கள்ளச்சாராய விற்பனை வழக்குகளில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 109 லிட்டர் சாராயம், 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அடுத்தடுத்து சிகிச்சை பெற்று வருபவர்கள் உயிரிழந்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின்  குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ50000 வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web