விழுப்புரம் மாவட்டத்துக்கு பிப்ரவரி 21ம் தேதி உள்ளூர் விடுமுறை!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, பிப்ரவரி 21 (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம் முக்கிய நிகழ்வாக நடைபெற உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அந்த நாளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அவசர அலுவல்களை கவனிக்க மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும். ஆண்டு இறுதித் தேர்வுகள் அந்த நாளில் நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அவை வழக்கம்போல் நடைபெறும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
