பிரபல நடிகையிடம் ஜிம் பயிற்சியாளர் அத்துமீறல்! போலீஸில் பரபரப்பு புகார்!

 
பாயல் சர்க்கார்

பிரபல வங்கமொழி நடிகை பாயல் சர்க்கார் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் பா.ஜ.கவில் இணைந்த இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், நடிகை பாயல் சர்க்கார் கொல்கத்தா அருகில் உள்ள பராக்பூர் போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், என் செல்போனுக்கு ஆபாசத் தகவல்கள் அடிக்கடி வந்தது. அந்த எண்ணை சோதித்த போது அது ஜிம் பயிற்சியாளரான என் தூரத்து உறவினர் என்பது தெரிய வந்தது.

பாயல் சர்க்கார்

அவர் நம்பரை பிளாக் செய்தேன். எனினும் வேறொரு எண்ணில் இருந்து வந்து தொடர்ந்து ஆபாச மெசேஜ்களையும் ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களையும் அனுப்பினார். பின்னர் தனது விருப்பத்தை ஏற்கவில்லை என்றால் ‘போட்டோஷாப்’ செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்குவேன் என்றும் தன்னை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

அவருடன் நடந்த உரையாடல்களின் ‘ஸ்கிரீன்ஷாட்’டையும் போலீஸில் பாயல் சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாயல் சர்க்கார்

பிரபல வங்கமொழி நடிகை பாயல் சர்க்கார் தனது தூரத்து உறவினரான ஜிம் பயிற்சியாளர் மீது பாலியல் தொலை கொடுப்பதாக அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web