பீச்சில் பெண்களிடம் அத்து மீறல்... இந்திய சுற்றுலா இளைஞர்கள் தகராறு… 5 பேர் படுகாயம்!

 
தாய்லாந்து


 
தாய்லாந்தில்  அமைந்துள்ள பட்டாயா பீச். இந்த பீச்சில் பிப்ரவரி 21ம் தேதி  2 பெண்கள் கடற்கரையில் அமர்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 2 இந்திய சுற்றுலா பயணிகள் அப்பெண்களை தொந்தரவு செய்யத் தொடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் பெண்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்தார். 

தாய்லாந்து

உடனடியாக  அதனை  நீக்கும்படி  அப்பெண்கள் கேட்டபோது, அந்த சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அது கைகலப்பாக மாறியது. உடனே அருகில் இருந்த டாக்ஸி டிரைவர் ஒருவர் இந்த தகராறை தடுக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.

தாய்லாந்து

அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் தகராறை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மேற்கண்ட விபரங்கள் தெரிய வந்தது. இந்த மோதலில் 2 தாய் பெண்கள், 2 இந்தியர்கள் மற்றும் உதவிக்கு சென்ற மோட்டார் டாக்ஸி ஓட்டுனர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். டாக்ஸி ஓட்டுநருக்கு கால் முறிவு மற்றும் கண் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?