மணிப்பூரில் மீண்டும் வன்முறை… வீடுகள் எரிப்பு, மக்கள் வெளியேற்றம்!
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் வீடுகள் மற்றும் அரசு குடியிருப்புகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் வாழ்ந்த பலர் பாதுகாப்புக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு கடந்த 4ஆம் தேதி பதவியேற்றது.

அரசு பதவியேற்ற மறுநாளே சுராசந்த்பூர் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனைத் தொடர்ந்து உக்ருல் மாவட்டம் லிட்டன் பஜார் பகுதியில் முன்தினம் இரவு மீண்டும் வன்முறை வெடித்தது. வன்முறை கும்பல் பல வீடுகளுக்கு தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அருகிலுள்ள லிட்டன் மற்றும் மாங்கோட் கிராமங்களில் டாங்குல் நாகா மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் 25 வீடுகள் மற்றும் 4 அரசு குடியிருப்புகள் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை அதிகரித்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குகி சமூகத்தை சேர்ந்த சைக்கூல் எம்எல்ஏ கிம்னியோ ஹாவ்கிப் மற்றும் டாங்குல் நாகா சமூகத்தை சேர்ந்த உக்ருல் எம்எல்ஏ ராம் முய்வா ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
