விழுப்புரத்தில் கொடுமை... 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவர் கைது!

 
பள்ளி சிறுமி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த செ.புதூர் கிராமத்தில், பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த 9 வயதுச் சிறுமிக்குக் கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட மாணவரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் 19 வயதான மில்டன் ஜோஸ்வா என்பவர் மீதுதான் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவத்தன்று அதே கிராமத்தைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயதுச் சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்ததால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அங்கு வந்த மில்டன் ஜோஸ்வா, அந்தச் சிறுமியை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமி

வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பெற்றோரிடம், சிறுமி நடந்த சம்பவத்தை விவரித்துக் கண்ணீருடன் அழுதுள்ளாள். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகப் பெரியதச்சூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், மில்டன் ஜோஸ்வாவைப் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மகளிர் போலீசார் மில்டன் ஜோஸ்வா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!