வைரலாகும் இன்ஸ்டா... சூர்யா ஜோதிகா தம்பதி காமாக்யா கோவிலில் சாமி தரிசனம்!

தென்னிந்திய திரையுலகில் நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர் சூர்யா ஜோதிகா தம்பதியினர். இதில் சமீபத்தில் சூரியா நடிப்பில் வெளியான 'கங்குவா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த அளவில் வெற்றியடைவில்லை. அதனை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர் என நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இப்படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 'ரெட்ரோ' படம் வெற்றி பெற வேண்டுமென சூர்யா, ஜோதிகா இருவரும் அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது இந்தியாவின் பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த கோவிலில் சாமி தரிசனத்தின் போது எடுத்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!