வைரல் மாஸ் வீடியோ... இந்தியாவிலேயே மிகப்பெரிய படை தவெக ஐடி விங்... கெத்து காட்டும் விஜய்!

 
விஜய்

தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி கூட்டம் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகிய தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது. கட்சி கொள்கை மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்வது உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த பயிற்சி கூட்டத்தில் தவெக தலைவர் வீடியோ மூலம் தனது அறிவுரைகளை கட்சியினருக்கு வழங்கினார். அதில், ” எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்று தான் திட்டமிட்டேன். பிறகு வீடியோ கால் வரலாம் என்று பார்த்தேன். அவை இயலாத காரணத்தால் இந்த வீடியோவை பதிவு செய்து அனுப்பியுள்ளேன்.

தவெக

நமது சமூக வலைதள படை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என கூறுகிறார்கள். நீங்கள் வெறும் சமூக வலைதள ரசிகர்கள் அல்ல. நீங்கள் நமது கட்சியின் சமூக வலைதள தொண்டர்கள். அனைவரது மத்தியிலும் நமது ஐடி விங் நிர்வாகிகள் மிகவும் ஒழுக்கமானவர்கள் எனப் பெயர் எடுக்க வேண்டும். எல்லோரும் அப்படி சொல்லனும். அதனை மனதில் வைத்து அனைவரும் வேலை செய்யுங்கள். கூடிய சீக்கிரம் நான் உங்களை சந்திக்கிறேன். வெற்றி நிச்சயம்.” என வீடியோ மூலம் அறிவுரை கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web