வைரல் வீடியோ!! செயின் பறிக்க வந்த மர்ம நபரை அடித்து விரட்டிய 10 வயது சிறுமி!!

 
பாட்டி, பேத்திகள்

வடமாநிலங்களில் குற்றவியல் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. மக்கள் துணிச்சலுடன் தங்களைத் தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.  மகாராஷ்டிராவில்  புனே நகரில் பாட்டியும் பேத்தியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி பாட்டியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முற்பட்டார்.


உடனடியாக பாட்டியுடன் வந்த  10 வயது சிறுமி  கையில் இருந்த பையால் மர்ம நபரை சராமாரியாக தாக்கத் தொடங்கினார். அந்த பகுதியில் இருந்த சிசிடிவியில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாட்டியும், பேத்திகளும்  குடியிருப்பு பகுதியில்  ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து செல்கின்றனர். அப்பொழுது திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தனது வாகனத்தை நிறுத்தி பாட்டியிடம் இருந்து செயினை பறிக்க முயற்சி செய்தார்.

க்ரைம்

 ஆனால் அவருடன் வந்து கொண்டிருந்த சிறுமி சுதாரித்து கையில் வைத்திருந்த பையால் அந்த நபரை தாக்கிக் கொண்டே கத்தி கூச்சல் போடத் தொடங்கினார்.  இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பயந்து அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார். இந்த வீடியோவை  பார்த்த நெட்டிசன்கள் சிறுமிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பதிவிட்டு வருகின்றனர். பிப்ரவரி 25 அன்று நடந்த இச்சம்பத்தின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவல் அதிகாரிகள் 10 வயது சிறுமியின் துணிச்சலான செயலை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web