வைரல் வீடியோ!! கங்கணா ரணாவத் ஹோலி கொண்டாட்டம்!!

 
சந்திரமுகி 2

இன்று மார்ச் 8ம் தேதி புதன்கிழமை உலகம் முழுவதும் ஹோலிப்பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி தினத்தில் அனைவரும் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து ஒருவரை ஒருவர் மாற்றிக்கொண்டு முகத்தில் வண்ணங்களை பூசிக் கொண்டாடுவர். அந்த வகையில், சினிமா பிரபலங்கள்  பலரும் படப்பிடிப்பு தளத்திலேயே ஹோலியை கொண்டாடி அது குறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் “சந்திரமுகி 2” படக்குழுவினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் படக்குழுவினருடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சந்திரமுகி

வீடியோவில் கங்கனா ரனாவத் கையில் வண்ண பொடியை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒவ்வொருவர் மீதும் பூசுகிறார். மேலும், “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடிகர் ராகவாலாரன்சும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரமுகி 2 திரைப்படம்  லைக்கா தயாரிப்பில் கீரவாணி இசையில்  பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web