யூ-ட்யூபர் இர்ஃபானை நெகிழ வைத்த கமல்... வைரலாகும் வீடியோ!

 
இர்பான்

முகம்மது இர்ஃபான் பிரபல யூடியூபர். இவர் திருமண வைபவத்திற்காக நடிகர் கமலை சந்தித்து அழைப்பு விடுத்தார்.  தமிழகத்தின் மூலை முடுக்கு, இண்டு  இடுக்குகளில் இருக்கும் அனைத்து உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் வரை இர்ஃபானின் கால் படாத இடங்களே இல்லை எனலாம். அந்தந்த உணவகங்களில் என்னென்ன ஸ்பெஷல் உணவு வகைகளோ அவற்றை தேடிப்பிடித்து அதன் செய்முறைகளை சுவை சேர்த்து வீடியோ பதிவிடுவது தான் இர்ஃபானின் பணி.  இதனால் இர்ஃபானின் சேனலுக்கு பாலோயர்ஸ் அதிகம். 


உணவகங்கள் தங்களது விளம்பரத்துக்காக அவரை வலிய வரவழைத்து, உணவுகளை பரிமாறி உபசரித்து அனுப்புவதும் அதிகரித்து வருகிறது. அதே போல் சில வீடியோக்கள் சர்ச்சையிலும் இர்ஃபான் சிக்கியதுண்டு. இவர் சமீபகாலமாக  திரைப்பட புரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு  வருகிறார். இதன் மூலம் அவரது வீடியோக்களில் திரைப்பட நட்சத்திரங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை இவரது நண்பர்கள் தான். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது பாலோயர்ஸ் எப்போ உங்க திருமணம் என அடிக்கடி கேட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் என பதிவிட்டிருந்த இர்ஃபான்  தற்போது திருமண ஏற்பாடுகளில் முழு மூச்சாக இறங்கி இருக்கிறார்.

இர்பான்

தற்போது திருமணத்திற்கான அழைப்பிதழ்களை விநியோகித்து வருகிறார். அந்த வகையில் அவரது விருப்பமான நடிகரான கமல்ஹாசனை சந்தித்து சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார்.  இதனை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கும் இர்ஃபான் ‘மற்றுமொரு முறை அவரது பொன் வார்த்தைகளை கேட்கும் பாக்கியம் கிட்டியது. திருமண அழைப்பிதழை குடும்பத்தோடு சென்று வழங்கினேன்’ என குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரது பாலோயர்கள் இர்ஃபானின் திருமணத்தை காட்டிலும் கல்யாண விருந்தில் மெனுவிற்காக காத்துக்கிடக்கின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web