வைரல் வீடியோ!!தூய்மை பணியாளருடன் சுத்தம் செய்த படியே நடனம்!! பிரபல பாடகர் அட்ராசிட்டி!!

 
ஹனிசிங்

பிரபல ராப் பாடகர் ஹிர்தேஷ் சிங் . இவர் தமிழில் எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற ‘Speed speed speed வேணும்’ பாடலில் அனிருத், ஹிப் ஹாப் ஆதியுடன் சேர்ந்து பாடியிருப்பார். இந்த பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். இவர் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் சரி, வெளியே எங்கே சென்றாலும் தலைப்பு செய்தியாகி விடுவார். வித்தியாசங்களைசெய்து ரசிகர்களை கவர்ந்திழுப்பதில் இவருக்கு நிகர் யாரும் கிடையாது என்பது நெட்டிசன்களின் கருத்து.

அந்த வகையில்,  சமீபத்தில், ஹனி சிங் தனது இசை நிகழ்ச்சி ஒன்றில் தூய்மை பணியாளர்  ஒருவருடன் நடனமாடி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஹனி சிங் தூய்மை பணியாளருடன் யோ யோ ஹனி சிங் மேடையில் வைப் செய்கிறார்.  மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது தூய்மை பணியாளர் ஒருவர் வந்து மேடையில் இருந்த குப்பையை அகற்றி கொண்டிருந்தார்.

ஹனிசிங்

 ஹனிசிங்  திடீரென அவரை கட்டிப்பிடித்து நடனமாடத் தொடங்கினார். நிகழ்ச்சியை காணவந்த ரசிகர்கள் இதனை  வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்  பதிவிட்டுள்ளனர்.  அந்த வீடியோவை பார்த்த பலரும் ஹனி சிங்கிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web