வைரல் வீடியோ!! மைதானத்தில் பயிற்சியாளருக்கு மசாஜ் செய்து விடும் இளம் வீரர்!!

 
மசாஜ்

உத்தரபிரதேச மாநிலத்தில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருபவர்  அப்துல் அஹத். இவர் ரவீந்திர கிஷோர் ஷாகி கிரிக்கெட் மைதானத்தில் இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது மைதானத்திலேயே பயிற்சியாளர் அப்துல் அஹத்திற்கு இளம் வீரரை  மசாஜ் செய்துவிடும்படி சொல்லியிருக்கிறார். இந்த  வீடியோ நேற்று முன் தினம் சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் மைதானத்திற்குள் உள்ள ஓய்வு  அறையில் பயிற்சியாளர் அப்துல் மேசையில் படுத்துள்ளார்.  


இளம் வீரர் அவருக்கு  மசாஜ் செய்து விடுகிறார்.  இந்த வீடியோ வைரலான நிலையில் இளம் வீரரை கட்டாயப்படுத்தி மசாஜ் செய்ய வைத்ததால்  பயிற்சியாளர் அப்துலை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மாநில விளையாட்டுத்துறை இயக்குனர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மசாஜ்
பேட்மிண்டன் விளையாடும் போது விழுந்து முதுகில் காயம் ஏற்பட்டதாக ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.  வலியால் அதிகம் அவதிப்படுவதால் வீரரிடம் மசாஜ் செய்துவிடும் படி கேட்டுக் கொண்டதன் பேரில் தான் வீரர் மசாஜ் செய்துவிடுகிறார். அவர் விருப்பப்பட்டு தான் அதை செய்தார். ஆனால் அதே நேரத்தில் அதனை யார் வீடியோவாக பதிவு செய்தார்கள் எனத் தெரியவில்லை என பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், இந்த வீடியோ மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு வந்ததும்  மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web