பெயிண்ட் அடித்த தோனி... வைரலாகும் வீடியோ! ‘தல’ களமிறங்கிடுச்சு!

 
தோனி

16வது சீசன்  ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31  ம் தேதி அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இதில் களம் காண இருக்கும் வீரர்கள் கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்கள் அமரும் இருக்கைகளுக்கு எம் எஸ் தோனி மஞ்சள் பெயிண்ட் அடித்துள்ளார். இது குறித்த  வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.


அதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3 ம் தேதி இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.   கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் ஐபிஎல் திருவிழா நடத்தப்படவில்லை. அந்த வகையில்  3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரல் 3ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது.
போட்டியை காணவரும் ரசிகர்கள் அமரும்  இருக்கைகளுக்கு தல தோனி பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்கிறார்.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல்

இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவில் இது நல்லாவே வேலை செய்யுது. இதனால் அடுத்த சேருக்கும் நான் பெயிண்ட் அடிக்கிறேன் என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.  இந்தப் போட்டிக்கான கவுண்டர் டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.  நள்ளிரவு முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து டிக்கெட்டுகள் வாங்கிச் செல்கின்றனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகள். 

ஏப்ரல் 3 – சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இரவு 7:30 மணி

ஏப்ரல் 12 – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ், இரவு 7:30 மணி
ஏப்ரல் 21 – சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இரவு 7:30 மணி
ஏப்ரல் 30 – சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ், பிற்பகல் 3:30 மணி

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web