இதப்பார்றா!! வைரல் வீடியோ!! கும்மி அடித்து , பாட்டுப்பாடி ஆண்கள்நடனம்!!

 
ஆண்கள் நடனம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற  தண்டுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. தண்டுமாரியம்மனை பண்ணாரி மாரியம்மனின் அக்கா என  பக்தர்கள் பரவசத்துடன் அழைக்கின்றனர். இங்கு  பல உற்சவங்கள் நடைபெற்றாலும் ஒவ்வொரு ஆண்டும்  கம்பம் மற்றும் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான  திருவிழா ஏப்ரல் 18ம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது.அடுத்த நாள் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. இதற்காக  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்கள், இருசக்கர வாகனங்கள், 4 லாரிகளில் சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டமாளம் மலைக்கிராமத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த தனியாருக்கு சொந்தமான ஆலமரத்தை வெட்டி எடுத்து லாரியில் ஏற்றி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.


அதன்பின்னர் அன்று இரவு முதல் ஏப்ரல்  21ம் தேதி இரவு வரை கம்பத்தை 3 கவுட்டிகளாக வடிவமைக்கும் பணி நடைபெற்றது. இந்த கம்பம் உயரம் 16 அடியும், பருமன் 4 அடியாகவும் இருந்தது. இதுதான் ஈரோடு மாவட்டத்திலேயே உயரமான தடிமனான கம்பம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 4 அடி ஆழத்துக்கு குழி வெட்டி அதில் கம்பம் நடப்பட்டது. அதன்பின்னர் தண்டு மாரியம்மன் மற்றும் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தாரை தப்பட்டை முழங்க இளைஞர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கம்பத்தை சுற்றி நள்ளிரவு 12 மணி வரை ஆடினார்கள். தொடர்ந்து  மே 2ம் தேதி வரை தினமும் பக்தர்கள் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை கம்பத்தை சுற்றி ஆடிப்பாடி மகிழ்வார்கள். நேற்று ஊர் ஆண்களே கும்மி அடித்து பாட்டு பாடி நடனமாடினர்.

ஈரோடு திருவிழா
மே2 -அம்மன் அழைத்தல் 
மே 3 -குண்டம் இறங்கும் விழா
மே 4 - கம்பம் பிடுங்குதல்
மே 5-திருவிளக்கு பூஜை
மே 6 - மஞ்சள் நீராட்டு விழா
மே 11 -  மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்துள்ளது. இவ்விழாவை காண தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web