வைரல் வீடியோ!! உலகின் உயரமான கோபுரத்தை தாக்கிய மின்னல்!!

 
மின்னல்

மழை பெய்தாலே மரம் கட்டிடத்தின் கீழ் ஒதுங்க கூடாது . அதன் மீது இடி , மின்னல் தாக்கலாம் என கிராமத்தில் பெரியவர்கள் எச்சரிக்கை செய்வதுண்டு. ஆனால் உண்மையில் நேரடியாக கட்டிடங்களை மின்னல் தாக்குவதை பலரும் பார்த்ததில்லை. நேரடியாக கட்டிடம் மீது மின்னல் தாக்கினால் எத்தனை பயங்கரமாக இருக்கும் என சமீபத்திய வீடியோ ஒன்று தெளிவுபடுத்தியுள்ளது.


கனடாவின் ஒன்டாரியோ மகாணத்தில் உள்ள டொரன்டோ நகரில் உலகின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்று சி.என் கோபுரம். இந்த கோபுரத்தின் மொத்த உயரம்  553.3 மீட்டர் உயரம். 1973ல் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 1976ல் நிறைவடைந்தன.  அதே ஆண்டில்  ஜூன் 26ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மேற்கு அரைக்கோளத்தில் தனித்த நிலையான கட்டுமானம் கொண்ட உயரமான கோபுரங்களில் 9வது இடத்தில் உள்ளது. டொரன்டோ நகரின் வான்வரையாக இருக்கிறது. இந்த கோபுரத்தைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 2 மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை புரிகின்றனர்.

மின்னல்

இதன் பெயரான சி என் என்பது கனாடியன் நேஷனல் .  1995ல் அமெரிக்கக் கட்டடப் பொறியாளர்கள் சமூகம் இந்த  சி.என் கோபுரத்தை நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. இது பெரிய கோபுரங்கள் உலக சம்மேளனத்திற்கு சொந்தமானதாகும். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலையில் இந்த கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதனையடுத்து, கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், சுமார் 8 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎன் கோபுரத்தை மின்னல் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!