வைரல் வீடியோ... அட்ரா சக்க... தங்க பாத்திரத்தில் சமையல் செய்து சாப்பிடும் இளம்பெண்!

தங்கம் என்றாலே பெண்களுக்கு ரொம்பவே இஷ்டம் தான். இவர்கள் பலவிதமான தங்க நகைகளை அணிந்து பார்ப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பர். இதேபோன்று சீனாவில் தங்கத்தால் ஆன பாத்திரத்தில் பெண் ஒருவர் சமையல் செய்து சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் ஷென்சென் என்ற இளம் பெண் சொந்தமாக 2 நகைக்கடைகளை நடத்தி வருகிறார்.
In Shenzhen, China, a woman used a 1-kilogram pure gold pot, valued at nearly $100,000, to prepare #hotpot . pic.twitter.com/tRtJNNKlE8
— Discover GuangZhou (@Discover_GZ) February 20, 2025
அவர் தனது நண்பரின் தங்கப்பட்டறையில் ஒரு கிலோ தங்கத்தில் தங்கத்தால் ஆன பாத்திரத்தை செய்து வாங்கிக் கொண்டார். அந்த தங்க பாத்திரத்தில் தனக்கு பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டுள்ளார். தங்கப் பாத்திரம் விற்பனைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே பாத்திரத்திற்கு உரிமையாளரான வாடிக்கையாளரிடம் அனுமதி பெற்று தான் சமைத்து சாப்பிட்டு பார்த்தேன் என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தங்க பாத்திரத்தால் சமைப்பதால் உணவின் சுவையில் எந்த ஒரு மாறுபாடும் ஏற்படவில்லை. தங்கம் ஒரு சிறந்த கடத்துத்திறன் கொண்டது எனக் கூறியுள்ளார். இந்த தங்க பாத்திரத்தின் விலை இந்திய மதிப்பின்படி ரூ 84 லட்சம் மட்டுமே எனக் கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!