வைரல் வீடியோ... கயிறு இழுக்கும் போட்டியில் சரிந்த அண்ணாமலை… !

 
அண்ணாமலை

தமிழகத்தில் நாளை பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பொங்கல் விழாவில் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்ட போது திடீரென கயிறு அறுந்து அண்ணாமலை கீழே விழ சென்றதால் அதிர்ச்சியடைந்தனர். கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கயிறு இழுக்கும் போட்டியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அப்போது கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்று அவர் வடம் இழுத்த போது இரு தரப்பும் போட்டிப்போட்டு கயிறை இழுத்த நிலையில், அண்ணாமலை பக்கம் இருந்த கயிறு சட்டென அறுந்தது. இதில் அண்ணாமலையுடன் இருந்த பாஜகவினர் கீழே விழுந்தனர். அண்ணாமலை தடுமாறி கீழே விழ போன போது, அவரை பாதுகாவலர்கள் தாங்கி பிடித்தனர். இது குறித்த  வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web