வைரல் வீடியோ ... நடுரோட்டில் முதல்வர் ஸ்டாலின் கையால் தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து கொண்ட மணமக்கள்!

 
ஸ்டாலின்

தமிழக முதல்வர் மாவட்ட வாரியாக களப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் பிப்ரவரி 21,22ம் தேதிகளில்  கடலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.  21ம் தேதி கடலூர் மஞ்சகுப்பத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அன்று இரவு முதல்வர் நெய்வேலியில் விருந்தினர் இல்லத்தில் தங்கினார்.  

பிப்ரவரி 22 ம் தேதி காலை நெய்வேலியில் இருந்து வேப்பூர் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழக ஏழாவது மாநாட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது நெய்வேலி மந்தாரகுப்பத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மணமக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வருகைக்காக காத்திருந்தனர்.முதல்வர் முன்னிலையில் அவர்கள் சாலையில் நின்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தனர். 

ஸ்டாலின்

அந்நிலையில் முதல்வர் அவர்கள் வரும்பொழுது  மணமக்கள் மற்றும் நரிக்குற சமூகத்தினர் முதல்வர் அவர்கள் வாகனத்தின் முன்பு சென்று நின்றுவிட்டனர்.   காரை நிறுத்தியதும் அவர்கள் முதல்வரிடம் தாலியை கொடுத்தனர். முதல்வர் ஸ்டாலின் தனது கையாலே மணமக்களுக்கு எடுத்துக் கொடுத்து திருமணத்தை சாலையிலே நடத்தி வைத்தார். பின்னர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்றார். இந்நிகழ்ச்சி நரிக்குறவர் சமூக மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?