வைரல் வீடியோ.. திருமணவிழாவில் நிஜ பாம்பு போல நாகினி நடனமாடிய ஜோடி!

 
நாகினி நடனமாடிய ஜோடி!  

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழமொழி. ஆனால் இப்போதைய திருமணங்களில் சொர்க்கத்தை காட்ட முயன்று வருகின்றனர் மணமக்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வித்தியாசமான திருமணம், எதிர்பாராத உணவு வகைகள் என 60 வருட வாழ்க்கையை ஒரே நாளில் வாழ்ந்து தீர்த்து விடுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் பல நாட்கள் நீடிக்கின்றன.  

அதில் நடனத்திற்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில்  சமீபத்தில் ஒரு வினோதமான நாகினி நடன வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவில் இளைஞர் மற்றும் அவரது உறவினர் இணைந்து வித்தியாசமான நாகினி நடனத்தை ஆடியுள்ளனர்.  இந்த நடனம் பார்ப்பவர்களை அதிசயத்திலும், சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

அதில் அந்த இளைஞன் தன்னை பாம்பாக கற்பனை செய்து புல்லாங்குழல் இசைக்கேற்ப  ஆடுகிறார். ஆனால் அவருடன் நடனமாடிய அவரது உறவினர் தான், அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது அசைவுகள் மற்றும் உணர்வுகள் அனைத்தும் நிஜமான பாம்பை போல இருந்தது. இதனால் இந்த நடனம் வேகமாக வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் இதற்கு தங்களது  கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web