வைரல் வீடியோ... மைதானத்தில் மழை நீரை அகற்றும் போது வழுக்கி விழுந்த பணியாளர்... சிரிக்கும் வீரர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டியில் நேற்று மழை காரணமாக ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 273 ரன் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 85 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டும், ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
How Pakistan clears water from ground. 🤣🤣🤣 pic.twitter.com/X3SqFAXIJi
— AKTK (@AKTKbasics) February 28, 2025
பின்னர் 274 ரன் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும் (40 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ஸ்டீவன் சுமித் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அதற்குள் மைதானத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. மழை நின்றாலும் தண்ணீரை உடனடியாக அகற்ற முடியவில்லை. 2வது இன்னிங்சில் 20 ஓவர் வரை நடந்திருந்தால் டக்வொர்த்- லீவிஸ் விதிப்படி முடிவு அறிவிக்கப்பட்டு இருக்கும். அதற்கும் வழியில்லாமல் போனதால் இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர் அறிவித்தார். ஆஸ்திரேலிய அணி 4 புள்ளியுடன் அரைஇறுதிக்கு முன்னேறியது.
ஆப்கானிஸ்தான் 3 புள்ளியுடன் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம் முன்னதாக மழை பெய்தபோது மைதானத்தை முழுமையாக மூடாததால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கத் தொடங்கியது. அதை வெளியேற்றுவதற்காக மைதானத்தில் இருந்த நிர்வாகிகள் வீடு துடைக்கும் மாப்பை வைத்து தள்ளினார்கள். அப்படி தள்ளும்போது மைதான பராமரிப்பாளர்களில் ஒருவர் வழுக்கி விழுந்தார். அதனை பார்த்து பெவிலியனில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் சிரித்து கும்மாளமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!