வைரல் வீடியோ... மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து கட்டியணைத்து கொண்ட ரசிகர்!

 
வைரல் வீடியோ... மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து கட்டியணைத்து  கொண்ட ரசிகர்!  

இந்தியாவில் 18 வது ஐபிஎல் போட்டிகள் நேற்று மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை தொடங்கியுள்ளது. அந்த வகையில் முதல் போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் அரங்கேறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 

ஈடன் கார்டன்

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும். கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 56 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் குருணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 59 ரன்களும், பில் சால்ட் 56 ரன்களும் அடித்தனர். 

பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருனால் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.  முன்னதாக இந்த ஆட்டத்தின் இடையே விராட் கோஹ்லியின் ரசிகர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி மைதானத்திற்குள் நுழைந்தார். ஓடி வந்து விராட் கோலியின் காலின் விழுந்து வணங்கினார். அத்துடன் விராட் கோஹ்லியை கட்டியணைத்துக் கொண்டார்.  பதிலுக்கு விராட் கோஹ்லியும் ரசிகரை கட்டியணைத்தார். உடனடியாக விரைந்து வந்த மைதான பாதுகாவலர்கள் ரசிகரை அப்புறப்படுத்தினர்.இந்த வீடியோ சமுக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?