வைரல் வீடியோ... மறந்து போன மனிதநேயம்... வாகனம் கவிழ்ந்து ஓட்டுனர் படுகாயம்... 500 கோழிகளை கொள்ளையடித்து சென்ற மக்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெமெதாரா மாவட்டத்தில் ராய்ப்பூர்-பிலாஸ்பூர் சாலையில் டெம்ரி கிராமத்தில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதன்படி கோழிகளை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துவிட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கோழிகளை திருடி சென்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவருக்கு உதவி ஒருவருமே முன்வரவில்லை. மக்கள் வாகனத்தில் இருந்த கோழிகளை திருடி செயல்வதிலேயே குறிக்கோளாக இருந்தனர்.
छत्तीसगढ़: मुर्गियों से भरा वाहन पलटा, घायल ड्राइवर को बचाना छोड़ मुर्गियां लूटकर भगने लगे लोग
— News24 (@news24tvchannel) June 22, 2025
◆ वीडियो सोशल मीडिया पर हुआ वायरल#Chhattisgarh | #Accident | Chhattisgarh | #viralvideo pic.twitter.com/FZw8iXcStj
வாகனம் கவிழ்ந்ததும், நூற்றுக்கணக்கான மக்கள் வாகனத்திலிருந்த கோழிகளை பிடிக்க தொடங்கினர். அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சலசலப்பும் உருவாகியது. வாகனத்தின் கதவுகள் திறந்ததும், வெறும் ஒரு சில நிமிடங்களில் 500க்கும் மேற்பட்ட கோழிகளும் கொள்ளையடிக்கப்பட்டு மாயமாகின.
இதில் படுகாயமடைந்த ஓட்டுநருக்கு உதவி செய்யாமல் மனிதநேயமற்ற செயல் என சமூக வலைதளங்களில் கண்டனக் கருத்துகள் பதிவாகி வருகின்றன.இது குறித்த வீடியோ தரவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த ஓட்டுநரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அதற்குள் அனைத்து கோழிகளும் முற்றிலும் காணாமல் போனதாக தெரிகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!