வைரல் வீடியோ... பாதுகாப்பு காவலருடன் தங்க நாணயம், வெள்ளி டோர் டெலிவரி... ஸ்விக்கி அட்ராசிட்டி!

 
பாதுகாப்பு காவலருடன் தங்க நாணயம், வெள்ளி  டோர் டெலிவரி

ஏப்ரல் 30ம் தேதி புதன்கிழமை அட்சய திருதியை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மட்டும் சுமார் 12000 கோடிக்கு தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  அட்சய திருதியையை முன்னிட்டு ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வழங்கிய ஒரு டெலிவரி சேவை, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  

ஸ்விக்கியின் டெலிவரி நிர்வாகி ஒருவர், தனது மோட்டார் சைக்கிளில் ஓர் உலோக லாக்கர் பெட்டியை எடுத்துச் செல்ல, அவரது பின்னால் சீருடை அணிந்த பாதுகாப்பு காவலர் ஒருவர் அமர்ந்துள்ளார்.  இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  பலரும் “இந்த அளவுக்கு பாதுகாப்பா?” என்ற ஆச்சர்யம் மற்றும் நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்து, “உண்மையான தங்க டெலிவரிக்கு உண்மையான பாதுகாப்பு தேவை சகோ” என  நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் சமீபத்தில் கல்யாண் ஜுவல்லர்ஸுடன் இணைந்து, 0.5 முதல் 1 கிராம் வரை தங்க நாணயங்களும், 5 முதல் 20 கிராம் வரை வெள்ளி நாணயங்களையும் வீட்டுக்கே  டெலிவரி செய்யும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படும் இந்த சேவையில், “அட்சய திருதியை” எனும் புனித நாளில் தங்கம் வாங்குவது செல்வத்திக்கான அடையாளமாக கருதப்படுவதால், வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வத்துடன் இந்த முறையில் தங்கத்தை வாங்கினர்.  ஸ்விக்கியின் இந்த முயற்சி பாரம்பரிய நம்பிக்கைகளை நவீன வசதிகளுடன் இணைக்கும் வகையில் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web