வைரல் வீடியோ... குட் பேட் அக்லி புரோமோ... கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
Mass sambavam in cinemas from tomorrow ❤️🔥#GoodBadUgly Grand release worldwide tomorrow 💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) April 9, 2025
Book your tickets now!
🎟️ https://t.co/jRftZ6uRU5 pic.twitter.com/mBM8iII96n
Mass sambavam in cinemas from tomorrow ❤️🔥#GoodBadUgly Grand release worldwide tomorrow 💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) April 9, 2025
Book your tickets now!
🎟️ https://t.co/jRftZ6uRU5 pic.twitter.com/mBM8iII96n
மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் என நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், இப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குட் பேட் அக்லி திரைப்படம் இதுவரை டிக்கெட் முன்பதிவில் மட்டும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் மொத்தமாக 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!