வைரல் வீடியோ... கொளுத்துற வெயிலுக்கு கதகதப்பா கம்பளி போர்வை வழங்கிய அமைச்சர்!

பாரதிய ஜனதா கட்சியின் 46வது தொடக்க நாளை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பீகார் மாநில அகியாபுர் கிராமத்தில் ஏழை மக்களுக்கு 500க்கும் மேற்பட்ட கம்பளி போர்வைகளை விநியோகம் செய்துள்ளார். இந்நிகழ்வு நடைபெற்ற நேரத்தில் வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. அமைச்சரும், பாஜக தலைவர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு போர்வைகளை பெற்றனர்.
BJP ministers in Bihar are distributing blankets to poor people when the temperature is above 40 degree centigrade.pic.twitter.com/RzyimDt2sa
— Sourav || সৌরভ (@Sourav_3294) April 8, 2025
இந்நிகழ்வின் புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர் சுரேந்திர மேஹ்தா, “ஆந்த்யோதயத் தத்துவத்துடனும், தேசநிர்மாண எண்ணத்துடனும் செயல்படும் உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜகவின் 46வது தொடக்க நாளையொட்டி, ஆடைகளை வழங்கினோம்” எனக் குறிப்பிட்டிருந்தார். “பசிக்குப் பணம் தரும் அளவுக்கு வெயில் இருக்கும் நேரத்தில் போர்வை என்ன வேலை?” என நக்கலான விமர்சனங்கள் பரவி வருகின்றன.
முன்னாள் சிபிஐ எம்எல்ஏ அவதேஷ் ராய் , “இந்த போர்வைகளை வாஜ்பாய் பிறந்த நாளான டிசம்பர் 25 ம் தேதி வழங்கியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால் இந்த சுடும் வெயிலில் வழங்கியது தேர்தலை நோக்கிய நாடக நடவடிக்கையே. மக்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறார்கள், உண்மையில் வேலை செய்யக் கூடியவர்கள் யார் என்பதை அறிந்திருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!