ஸ்டார் ஹோட்டலில் ரூ.14 கோடி மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிய மாடல் அழகி.. வைரல் வீடியோ!

 
பிரிசிலா குவேரா

ஸ்பெயினின் கேசரெஸ் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டினர் ஏராளமானோர் தங்குவது வழக்கம். இந்த நட்சத்திர ஹோட்டலில் உயர்தர வசதியில் அறைகள், உணவு, மது வகைகள் என அனைத்தும் உள்ளது. 

உணவகத்தில் தம்பதியினர் இணைந்து 45 மது பாட்டில்களை ஹோட்டல் டவல்களில் சுற்றவைத்து திருடியுள்ளனர். கேசரெஸில் புகழ்பெற்ற உணவகமான 
இந்த ஹோட்டலில் மெக்சிகோவை சேர்ந்த பெண்ணும், ருமேனிய-டச்சு நாட்டு காதலனும் தங்கியுள்ளனர். இவர்கள் அந்த ஹோட்டலில் இருந்து உயர்ரக 45 மது பாட்டில்களை டவல்களில் சுற்றவைத்து திருடிச்சென்றது தெரியவந்தது. அவர்கள் எடுத்துச்சென்றது அங்கிருந்த வீடியோவில் பதிவானது. 


அவர்கள் திருடிச்சென்ற பாட்டில்களில் ஒன்று 1806 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அதன் மதிப்பு சுமார் $3,30,000 (ரூ.2.7 கோடி) ஆகும். பிரஞ்சு ஒயின் ஆலையான சேட்டோ டி ய்கெம்யில் தயாரிக்கப்பட்ட (Chateau d’Yquem) இரண்டு பாட்டில்களும், 1883 இல் தயாரிக்கப்பட்ட €45,000 (38 லட்சம் ) மதிப்புள்ள பாட்டிலும் இதில் அடங்கும். இப்படி மிக உயரிய 45 மது பாட்டில்களை திருடிச்சென்றனர்.

பின்னர் ஹோட்டல் நிர்வாகத்தினர் அளித்த புகாரில் அந்நாட்டு காவல்துறை விசாரணையில் இறங்கியது. அப்போது, மெக்சிகோவின் முன்னாள் அழகியான பிரிசிலா குவேரா என்ற பெண், தனது காதலன் கான்ஸ்டன்டின் டுமித்ரு என்பவருடன் அட்ரியோ உணவகத்தில் விருந்தினராக தங்கியிருந்துள்ளனர். போலியான சுவிஸ் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி கான்ஸ்டன்டின் தங்கியிருந்தது அம்பலமானது.

பிரிசிலா குவேரா

அங்கே அவர்கள் இருவரும் உணவருந்திய பின்னர் ஓய்வெடுக்க அறைக்கு செல்வதற்குமது பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். இதையடுத்து அதிகாலை 2 மணி அளவில், பணியாளரை சாலட் தயார் எடுத்துவர சொன்னார். 

இதனிடையில் அவரது காதலன் கான்ஸ்டன்டின் மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியைத் திருடினார். சிறிது நேரத்தில் இருவரும் 45 மது பாட்டில்களை ஹோட்டல் டவல்களில் சுற்றவைத்து எடுத்துச்சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பிரிசிலா குவேரா மற்றும் கான்ஸ்டன்டின் டுமித்ரு இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web