வைரல் வீடியோ... ரன்னிங் ரேஸில் தோற்றதால் கடுப்பில் டிவியை போட்டு உடைத்த பிரபல யூடியூபர்!

 
வைரல் வீடியோ... ரன்னிங் ரேஸில் தோற்றதால் கடுப்பில் டிவியை போட்டு உடைத்த  பிரபல யூடியூபர்!


உலகின் பிரபல  யூடுயூபர்களில் ஒருவர் ‘ஐ ஷோ ஸ்பீடு’. இவர் ரன்னிங் ரேஸிலும் சிறப்பாக ஓடக்கூடியவர்.  இவரை யூடியூப்பில் மட்டும் 40 மில்லியனிற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.  இவரை போலவே காலையில் சீக்கிரம் எழுந்து ஐஸ் வாட்டரில் முகம் கழுவும் வீடியோ, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் Ashton Hall (ஆஷ்டன் ஹால்).

இவருக்கும் யூடியூப்பில்  3 மில்லியனிற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.  இருவரும் யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் நிலையில் இருவருக்கும் இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு  ரன்னிங் ரேஸ்ஸிற்கு செல்லும் அளவுக்கு சென்றுவிட்டது.  இருவரும் பேசி முடிவெடுத்து இருவருக்கும் இடையே ரன்னிங் ரேஸ் பந்தயம் வைத்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.
எனவே, 4 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு இருவருக்கும் இடையே போட்டி நடைபெற்றது.  புல் தடத்தில் நடந்த முதல் இரண்டு பந்தயங்களில் ஐ ஷோ ஸ்பீட் எளிதாக வென்றார். 29 வயதான ஆஷ்டன், தோல்வியை ஏற்காமல், மூன்றாவது சுற்றில் தான் வெற்றிபெறவேண்டும் என முடிவெடுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால், 20 வயதான ஐஷோஸ்பீட் மீண்டும் வெற்றி பெற்றார். 4 வது மற்றும் இறுதிப் பந்தயத்திலும் ஐ ஷோஸ் பீட் முன்னிலை வகித்து, ஆஷ்டனை முற்றிலும் தோற்கடித்துள்ளார்.  
ஒவ்வொரு தோல்வியிலும் ஆஷ்டன் ஹால் விரக்தியடைந்தார். 3 வது பந்தயத்திற்குப் பிறகு ஐஷோஸ்பீட் நடந்து செல்ல முயன்றபோது, ஆஷ்டன் ஏன் வெளியேறுகிறாய் எனக் கேட்டார். அதற்கு ஐஷோஸ்பீட், “நான் உன்னை மூன்று முறை வென்றுவிட்டேன்” என்று பதில் அளித்தார். அவர் ஆஷ்டனை “Ashton Fraud” எனக் கிண்டலாக அழைத்தார்.
இறுதியாக 4வது பந்தயத்தில் தோற்றுவிட்ட பிறகு, ஆஷ்டன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, “நான் நியாயமாக தோற்றுவிட்டேன்” எனக் கூறினார். இந்தப் பந்தயத்தின் நேரலை யூடியூபில் 3, 00,000 பார்வையாளர்களை கொண்டு வந்து சேர்த்தது. தோல்விக்கு பிறகு மிகவும் கடுப்பான  ஆஷ்டன் ஹால்  வீட்டிற்கு சென்று ரன்னிங் ரேஸ் வீடியோவை போட்டு பார்த்தார். அப்போது தோல்வி அடைந்தபோது கையில் வைத்திருந்த பந்தை வைத்து டிவியை நோக்கி ஓங்கி வீசினார். இதனால் அந்த டிவி உடைந்துவிட்டது.
டிவியை உடைத்த பிறகு பாருக்கு சென்று ஜில் செய்துவிட்டு மீண்டும் 3 மணிக்கு பிறகு காலையில் அலரம் செட் செய்துவிட்டு தன்னுடைய வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த அவருடைய ஃபாலோயர்ஸை  நீங்கள் மீண்டும்  ‘ஐ ஷோ ஸ்பீடுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது