வைரல் வீடியோ... பல்டி அடித்து சதம் அடித்ததை கொண்டாடிய ரிஷப் பண்ட்!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கிய நிலையில் இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீசுவதாக கூறிவிட்டார்.
WHAT A KNOCK, WHAT A CELEBRATION! 💪💯
— Star Sports (@StarSportsIndia) June 21, 2025
2018, 2021 & now 2025 - 𝙍𝙄𝙎𝙃𝘼𝘽𝙃-𝙋𝘼𝙉𝙏𝙄 continues on the English soil! 💪
👉 7th Test century
👉 4th vs ENG in Tests
👉 3rd in ENG in Tests#ENGvIND 1st Test, Day 2 | Streaming LIVE NOW on JioHotstar 👉 https://t.co/PLSZ49Mrj4… pic.twitter.com/MUySzy7Jr8
முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் பேட்டிங்கை தொடர்ந்தனர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் போட்டிகளில் பண்ட் அடித்த 7-வது சதம் இதுவாகும். இந்த நிலையில் சதம் அடித்ததை தனது பாணியில் பல்டி அடித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . தொடர்ந்து கில் 147 ரன்களிலும், பண்ட் 134 ரன்களிலும் வெளியேறினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!