வைரல் வீடியோ... ஏடிஎம்மில் குவிந்த மக்கள்... ரூ.500 போட்டா ரூ.1100 பணம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தின் நாக்லா புத்தா பகுதியில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இங்கு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகரூ500 எடுக்க வந்தவர்களுக்கு ரூ1100 கொடுத்துள்ளது. தொடக்கத்தில் சிலரை மட்டுமே புரிந்த இந்த தவறான பணவெளியீடு தகவல், விரைவில் அடுத்தடுத்து பரவியதால் ஏடிஎம் முன்பு மக்கள் கூட்டம் குவிந்தது.
UP : आगरा में ATM पर 500 की जगह 1100 रुपए निकलने पर लग गई लोगों की भीड़
— News24 (@news24tvchannel) June 22, 2025
◆ मलपुरा थाना क्षेत्र में स्थित ATM पर आया टेक्निकल फॉल्ट
◆ बैंक को सूचना देकर ATM को कराया गया बंद
Agra ATM | #Agra | #ATM pic.twitter.com/iLyrRYZkXU
ஒருவருக்கு கிடைத்த அனுபவத்தை மற்றவர்களும் பரிசோதித்து பார்த்தனர். அனைவருக்குமே 500 ரூபாய் டைப் செய்த போது 1100 ரூபாய் கிடைத்தது. மக்கள் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கும் தகவல் கூறினர். பலர் விரைந்து அங்கு சென்று இரட்டிப்பு பணத்தைப் பெற்றனர். 50க்கும் மேற்பட்டோர் இதனை பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் கணக்கிலிருந்து 500 ரூபாய் மட்டுமே கழிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று, ஏடிஎத்தை முடக்கினர். பின்னர் ஒரு இளைஞரிடம் நேரில் பணம் எடுக்கச் செய்து, தவறான வெளியீட்டை உறுதிப்படுத்தி கொண்டனர். இது முற்றிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்ததாக விளக்கம் அளித்துள்ளனர். தற்போது அந்த ஏடிஎம் இயந்திரத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது