வைரல் வீடியோ... பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட சீனியர் நர்சிங் ஆபீஸர்….. வெளுத்து வாங்கிய இளம்பெண்கள்!

 
மஹேஷ் குப்தா
 

 
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூரில் புற்றுநோய் மருத்துவமனை  செயல்பட்டு வருகிறது. இங்கு சீனியர் நர்சிங் ஆபீஸராக  பணிபுரிந்து வருபவர் மஹேஷ் குப்தா. இவர் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஒரு பெண் பாதுகாவலர் மற்றும் சில பெண் ஊழியர்கள், அவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து காவல்துறையினர் “ கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் மருத்துவமனையின் பாதுகாவலர், சீனியர் நர்சிங் ஆபீஸரின் காலரைப் பிடித்து இழுத்துச் சென்றுவிட்டனர்.  இதையடுத்து சில பெண் ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே அழைத்துச் சென்று சராமாரியாக தாக்கினர். 

மஹேஷ் குப்தா

இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் புகார் அளித்தனர். இதையடுத்து மருத்துவமனை மேலாளர் டாக்டர் சந்தீப் ஜஸுஜா விசாரணை குழுவை அமைத்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?