வைரல் வீடியோ... ஆட்டோ ஓட்டுநர் மீது செருப்பு தாக்குதல்!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் பெல்லந்தூர் பகுதியில், ஒரு இளம்பெண் தனது ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோ அவர் மீது லேசாக உரசிவிட்டது. இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண், ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண் ஆட்டோ ஓட்டுநரை தனது செருப்பால் சராமாரியாக தாக்குதல் நடத்தினர். மேலும், அவர் ஆட்டோ ஓட்டுநரை இந்தி மொழியில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
A Hindi speaking girl assaulted auto guy with slippers in Bengaluru..
— 👑Che_Krishna🇮🇳💛❤️ (@CheKrishnaCk_) May 31, 2025
Girl says the auto touched her vehicle.
Auto driver says you can check the CCTV cameras his auto didn't touch her vehicle. @BlrCityPolice arrest the lady for attacking auto guy. pic.twitter.com/2bCgOBGcI9
இந்த சம்பவத்தை ஆட்டோ ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வெளி மாநிலத்தவர்கள் பலர் பெங்களூருவில் தங்கியிருந்து கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து "குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளி மாநிலத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
