பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்!

 
தொழிலாளி

கர்நாடகா மாநிலம் மைசூரு டவுன் ஹெப்பால் தொழிற்பேட்டை பகுதியில் ஏராளமான தொழிற்சாலை உள்ளது. இந்த இடத்தில் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையும் இயங்கி வருகிறது. தொழிற்சாலை அருகே பட்டாசுகள் மற்றும் பட்டாசு கழிவுகளை சேகரித்து வைக்கும் குடோன் உள்ளது. 

பட்டாசு ஆலையில் காலைநேரத்தில் தொழிலாளிகள் வழக்கம்போல வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த தொழிலாளிகள் அங்கிருந்து வெளியேறினர். பின்னர் சிறிது நேரத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. வெடிவிபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  


இதனால் அங்கிருந்த அறைகள், குடோன் என அந்த தொழிற்சாலையில் இருந்த பல பகுதிகள் பயங்கர சேதம் அடைந்தன. மேலும் பட்டாசுகள் வெடித்து சிதறியது ஏற்பட்ட தீ அருகே இருந்த தொழிற்சாலைக்கு பரவியது. இதனால் தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதற தொடங்கியது.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு வாகனங்களில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுனர். அங்கிருந்த பொருட்கள் எதையும் போலீசாரால் மீட்க முடியவில்லை. அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டது. தொழிலாளிகள் வெளியே ஓடி வந்துவிட்டதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

தொழிலாளி

மேலும் இந்த தீ விபத்தில் குடோன் மற்றும் தொழிற்சாலையில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பிற பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரியவந்துள்ளது. 

சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்ட சத்தத்தால் அந்த பகுதியே அச்சத்தில் உறைந்துள்ளது. மேலும் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web