வைரல் வீடியோ... கோர்ட்டில் பெரும் சிரிப்பலை... பூனை மேல தான் கணவருக்கு பிரியம்... விவாகரத்து கோரி மனைவி வழக்கு!

 
பூனை

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் வசித்து வரும் தம்பதியர்  கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நலக் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.  நீதிமன்றத்தில் விலங்குகளுக்கே முக்கியக் காரணமாக மாறிய சம்பவமாக சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி, தனது கணவர் செல்லப் பூனையை தன்னை விட அதிகமாக நேசிப்பதாக குற்றம்சாட்டி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A-ன் கீழ் வழக்கு பதிவு செய்தார். 

இது குறித்து வழக்கில், “பூனை அடிக்கடி என்னைச் சொறிந்து விடுகிறது, கணவர் அதை மட்டும் பராமரித்துக் கொள்கிறார்.  எனது உணர்வுகள், தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன” என மனைவி தெரிவித்துள்ளார்.  வழக்கை விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா, “இது வழக்கமான கொடுமை வழக்கல்ல, உணர்வுப் பூர்வமான குடும்ப முரண்பாடு” என்று விளக்கம் அளித்தார். 

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

குற்றப்பத்திரிகையில் “மற்றொரு பெண்” என்று குறிப்பிடப்பட்டதும், அது ஒரு பூனை என்பதை தெரிந்ததும் நீதிமன்றத்தில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது. இது குறித்த  வழக்கின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில்  வைரலாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்களில்  பலரும் நகைச்சுவையுடன் பதிலளித்து, “பூனைகளும் இப்போது 498A வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளன” எனக்  கிண்டலாகக் கூறினர்.2024ல்  போபாலில் ஏற்பட்ட அங்கு ஒரு தம்பதியினர் நாய்களின் மீது மனைவி மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் 30 வருட திருமணத்திற்கு பிறகு விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?