வைரல் வீடியோ... அரசுப்பேருந்தில் பயணம் செய்த போக்குவரத்து துறை அமைச்சர்!

 
வைரல் வீடியோ... அரசுப்பேருந்தில் பயணம் செய்த போக்குவரத்து துறை அமைச்சர்! 
சென்னையில்  தனது வழக்கமான பணிகளை முடித்து கொண்ட போக்குவரத்து  துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் ஊருக்கு கிளம்பினார். இதற்காக  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு பேருந்து மூலம் தனது ஊருக்கு சென்றார்.  

அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். முதலில் அவர் பயணிகளிடம் பேருந்து சேவையில் ஏதும் குறைபாடு உள்ளதா? எனக் கேட்டார்.  


அதன் பின் ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டு தனது ஊருக்கு சென்றார். மேலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் அவர்களின் தேவைகள், செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இது குறித்த  புகைப்படம் , வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்த வீடியோவை அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது