வைரல் வீடியோ... சம்பளமில்லா வேலை செய்றோம்... பெங்களூருவில் ஓடும் வண்டியில் கனவு தூக்கம்... !

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் மாற்றியமைக்கப்பட்ட லாரி தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் லாரி ஒன்றில் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். “பெங்களூருவில் என் கனவு வேலை” எனும் உரையுடன் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த லாரி, ஒரு சிறிய அறை போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில் படுக்கை, ஏர் கண்டிஷனர், டிவி போன்ற வசதிகள் அனைத்தும் உள்ளன. “படுக்கும் தருணமே சிறந்த தூக்கம் இங்கிருந்து தொடங்குகிறது” எனும் வாசகத்துடன், இந்த விளம்பர வாகனம் cloud hybrid மேட்ரஸ் தயாரிப்பை பிரச்சாரம் செய்கிறது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் “Bangalore Diaries” என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, இப்போது 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. பலரும் இதை தங்கள் கனவு வேலை எனக் கூறி கமெண்ட் செய்துள்ளனர். ஒருவர் “ஃப்ரீயாவே இன்டர்ன்ஷிப் செய்யத் தயார், சார்!” எனக் கமெண்ட் செய்திருந்தால், மற்றொருவர் “3 இடியட்ஸ்” திரைப்பட வசனத்தை பதிவிட்டு “பணம் குறைவாகக் கிடைக்கலாம், ஆனா சந்தோஷமா இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த விளம்பர யுக்தி, தயாரிப்பின் பயனையும் நேரடியாக காட்டும் புதுமையான முயற்சியாக பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!