டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி!
ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்திருந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையாக இந்தியா 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டைவிட்டது. இந்த தோல்வியினால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இந்த தொடர்களில் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் மோசமாக இருந்தது. இதனால் சீனியர் வீரர்களான இருவர் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது. பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் பெர்த் போட்டியில் சதம் அடித்தாலும் விராட் கோலியின் சமீபகால ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை தாரைவார்த்து வருகிறார். இதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சொந்த நாட்டு ரசிகர்களே கடுமையாக விமர்சித்தனர்.
அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட உள்ள நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்த சில தினங்களில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட்கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட்கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாகவும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட்கோலி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
