சச்சின் சாதனையை தவிடு பொடியாக்கிய விராட் கோலி! குவியும் பாராட்டுக்கள்!

 
விராட் கோலி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும்  வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் அதேவேளையில், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

விராட் கோலி

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி 20 ரன்களை அடித்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25,000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கோலி 549 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். சச்சின் 577 இன்னிங்ஸ்களில் 25,000 ரன்களை அடித்ததுதான் இதற்குமுன் சாதனையாக இருந்தது.  தற்போது 549 இன்னிங்ஸ்களிலேயே 25 ஆயிரம் ரன்களை எட்டி சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

விராட் கோலி

இந்திய அணி இப்பொட்டியில் வெற்றியைப் பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 64.06% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 66.67% புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இலங்கை 53.3% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web