ரசிகர்கள் அதிர்ச்சி... விராட் கோஹ்லிக்கு காலில் காயம்... பைனலில் கலந்து கொள்வாரா?

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி இன்று மார்ச் 9 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதற்காக 2 அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டிக்கு முன்பு, இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோஹ்லிக்கு பயிற்சியின்போது கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது.
பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து ஒன்று தாக்கியதில் கடுமையான வலி ஏற்பட்டு உள்ளது. இதனால், உடனடியாக அவர் பயிற்சியை நிறுத்தினார். மருத்துவர் ஒருவர் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தேற்றினார். காயம் ஏற்பட்ட பகுதியில் மருந்து தடவி, பேண்டேஜ் போடப்பட்டுள்ளது.
இதன்பின்னர், பேட்டிங் பயிற்சியில் கோலி ஈடுபடவில்லை. இது குறித்து இந்திய அணியின் பயிற்சி ஊழியர் ஒருவர் ”அந்த காயம் அவ்வளவு தீவிரம் வாய்ந்ததல்ல. இறுதி போட்டியில் கோஹ்லி விளையாடுவார் என கூறினார். ரன் இலக்கை அடைவதற்காக ஆடும் விளையாட்டில் (சேசிங்) விராட் கோஹ்லியின் அபார திறமையை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. அதிலும், போட்டியில் வெற்றி பெறும்போது ரசிகர்கள் உற்சாக மிகுதியால் ஆரவாரம் செய்வர். இறுதி போட்டியில் அவருடைய ஆட்டம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கிடக்கின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!