விராட் கோஹ்லி திட்டவட்டம்... சாதனைகளைவிட வெற்றி தான் முக்கியம்!

 
விராட் கோஹ்லி

துபாயில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு அச்சாரம் இட்டுள்ளது. இந்திய அணி  4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

விராட் கோஹ்லி
இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய நிலையில்   3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த விராட் கோலி - ஷ்ரேயஸ் இருவரும் நிதானமாக விளையாடி 91 ரன்கள் பாட்னர்-ஷிப் அமைத்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லி 84 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. 
விருது வழங்கிய பின்னர் விராட் கோஹ்லி   "ஆட்டம் தொடங்கியது முதலே மெதுவாக விளையாடினேன். பாகிஸ்தான் போட்டியைப் போன்றுதான் இங்கேயும் மெதுவாக ஆடினேன். சூழலை உணர்ந்து அதற்கேற்ப ஆட வேண்டும்.

விராட் கோஹ்லி
ஒரு ரன்கள் மற்றும் இரண்டு ரன்கள் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தினேன். ஆட்டத்தின் போக்கை கவனத்தில் கொண்டு பாட்னர்-ஷிப் அமைப்பது மிகவும் முக்கியமானது.  நமக்கு தடையாக இருக்கும் விஷயங்களைப் பற்றி கவலைப்படக்கூடாது. நான் அதைப் பற்றி கண்டுகொள்வதில்லை. அதைப் பற்றி பேசுவதும் இல்லை. நீங்கள் சாதனைகளை எதிர்பார்க்காமல் விளையாடினால் போதும் அது உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். நான் என்னுடைய சதத்தைப் பற்றி கவலையடையவில்லை. என்னுடைய அணியின் வெற்றிக்கு எது தேவையோ அதைத்தான் செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web