பெரும் பரபரப்பு... இந்தியர்களுக்கு விசா நிறுத்தம்… வங்கதேசத்தில் பதற்றநிலை!
வங்காளதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கடும் போராட்டங்களும் வன்முறையும் வெடித்தன. இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், திபு சந்திர தாஸ் என்பவர் அடித்து கொல்லப்பட்டார். தொடர்ந்து இந்து மதத்தைச் சேர்ந்த பலர் மீது தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு எதிராக இந்தியாவில் நடந்த போராட்டங்கள் காரணமாக, இந்தியா – வங்கதேசம் இடையே தூதரக ரீதியான பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளின் உறவுகளில் கடும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது. டெல்லி, சென்னை, அகர்தலா உள்ளிட்ட அனைத்து தூதரகங்களிலும் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு விசாவைத் தவிர, சுற்றுலா உள்ளிட்ட பிற அனைத்து விசா சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
