விட்டாச்சு லீவு... கோடை சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிப்பு! நோட் பண்ணிக்கோங்க!

 
ரயில்

தமிழகத்தில் கோடை வெயில் இப்போதே தகிக்க துவங்கி விட்டது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதி வரும் மாணவர்கள் ஒரு பக்கம் என்றால், விரைவில் 10ம் வகுப்பு தேர்வுகளும் துவங்கி முடிந்து விடும். அதன் பின்னர் அக்கட தேசத்தில் திருப்பதி துவங்கி, சேச்சிகளின் ஊரில் இருக்கும் குருவாயூர் வரைக்கும் ஒரு பக்தி ட்ரீப் போயிட்டு, சம்மரைக் கொண்டாட ப்ளாண் பண்ணூவோம்.

இப்பவே பலரும் கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல திட்டமிடத் தொடங்கி விட்டனர். இந்தியாவை பொறுத்தவரை நடுத்தர மக்கள் பெரும்பாலும் பயணங்களுக்கு ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். குறைவான செலவில் நிறைவான பயணங்களுக்கு ரயில்கள் தான் ஏற்றவையாக உள்ளன. ஆனால் தென் மாவட்டங்களை பொறுத்தவரை எப்போதுமே ரயில்கள் அறிவிக்கப்பட்ட உடன் டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்து விடும்.

ரயில்

ரயில் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் கோடை விடுமுறையை குறைவான செலவில்  கொண்டாடும் வகையிலும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.  இதற்காக தலைநகர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் “திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30ம் தேதிகளிலும் மே மாதம் 7, 12, 21, 28ம் தேதிகளிலும் ஜூன் 4, 11, 18, 28 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.  

ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்

மறு மார்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி இடையே ஏப்ரல் மாதத்தில் 3, 10, 17, 24 தேதிகளிலும், மே மாதத்தில் 1, 8, 15, 22, 29 தேதிகளிலும், ஜூன் மாதத்தில் 5, 12, 19, 26 தேதிகளிலும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடையும்.  

இந்த ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web