எரிமலை வெடிப்பு... சென்னையில் விமான சேவை பாதிப்பு!

 
விமானம்

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை திடீர் வெடிப்பை ஏற்படுத்தி, வானிலே 14 கி.மீ உயரம் வரை சாம்பல் மேகங்கள் பறந்ததால் சர்வதேச விமானப் பாதைகள் குழப்பத்தில் சிக்கியுள்ளன. தீக்குழம்புகளால் சூழல் அமைப்பு பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய கிழக்கு வழித்தடங்களில் பறக்கும் விமானங்களுக்கு பெரிய தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம் சென்னையிலும் வெளிப்பட்டு, மும்பை நோக்கி காலை 11 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் தாமதமாக பறந்தது. அதோடு டெல்லி–ஐதராபாத், மும்பை–ஐதராபாத், மும்பை–கொல்கத்தா உள்ளிட்ட பல சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக காலை 9.30 மணிக்கு பறக்க இருந்த இன்னொரு மும்பை சேவையும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அலைக்கழிக்கப்பட்டனர்.

சாம்பல் மேகங்கள் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விமானங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சென்னை–லண்டன் உள்பட சர்வதேச பயணங்கள் பலவும் தாமதம் கண்டன. ஏர் இந்தியா, பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட சேவைகள் 3 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன. உள்நாட்டு சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதியில் சிக்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!