தொண்டர்கள் கவலை... தெலங்கானா முதலமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதி.. !

 
சந்திரசேகர் ராவ்

வயிற்று உபாதை காரணமாக திடீரென தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை அவரது கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பாஜகவை தீவிரமாக எதிர்த்து வரும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவிடம், கடந்த வாரம் தொடர்ந்து 9 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரனை நடத்தியது நாடு முழுவதும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது இந்த திடீர் உடல்நலக் குறைவு கவலையை அளித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாஜக, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்யும் நிலையில், டெல்லி மதுபான விற்பனை கொள்கை குறித்த முறைகேடு புகாரில் கே.சந்திரசேகர் ராவ்-யின் மகள் கவிதா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

கவிதா

இது தொடர்பாக அவரிடம் கடந்த வாரம் ஒரே நாளில் 9 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக எதிர்க்கட்சிகளை அரசு அமைப்புகள் மூலம் மிரட்டுவதாக கே.சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில், கே.சந்திரசேகர் ராவுக்கு நேற்று காலையில் திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கவிதா

வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சந்திரசேகர் ராவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிய வந்து, மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது, வயிற்றில் சிறிய புண் (அல்சர்) இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சந்திரசேகர் ராவுக்கு அல்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவரது மற்ற உடல் அளவுருக்கள் அனைத்தும் இயல்பாகவே உள்ளன என்று சிகிச்சை அளிக்கும் ஏஐஜி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.    

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web