63 மாணவர்களுக்கு வாந்தி ,மயக்கம்!! கதறி துடித்த பெற்றோர்கள்!!

 
வாந்தி மயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள தண்டரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அரசு உயர்நிலைப் பள்ளி .   இந்தப் பள்ளியில் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து சுமார்   150க்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று ஜூலை 15ம் தேதி சனிக்கிழமை   பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் மதிய உணவாக சர்க்கரைப் பொங்கல்  பரிமாறப்பட்டது.  சர்க்கரை பொங்கலில் சிறிய அளவில் பல்லி விழுந்ததை அறியாமல் சமைத்து மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.  மாணவர்கள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் போது பல்லி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சத்துணவு


சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பள்ளியின் ஆசிரியர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து 5 ஆம்புலன்ஸ்கள் உடனடியாக  அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டன.  பாதிப்படைந்த மாணவர்கள்  திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு   சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சத்துணவு


மதிய உணவில் பல்லி இருந்தது அறியாமல் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் வாந்தி மயக்கம் ஏற்பட்ட மாணவர்கள் உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து  வழக்குப் பதிவு செய்து  பள்ளியில் சமைத்தவர்கள் விநியோகம் செய்தவர்கள், ஆசிரியர்கள் மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்