வாக்காளர் பெயர் சேர்க்கும் பணி நிறைவு... புதிதாக 13 லட்சம் பேர் விண்ணப்பம்... பிப்ரவரி 17-ல் இறுதிப் பட்டியல் வெளியீடு!
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதள விண்ணப்பங்கள் வாயிலாகப் பெறப்பட்ட படிவங்களின் விபரங்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியானவர்கள் என மொத்தம் 13,03,487 பேர் புதிய வாக்காளர்களாகத் தங்களை இணைக்க விண்ணப்பித்துள்ளனர். பட்டியலில் உள்ள பெயர்கள் குறித்து ஆட்சேபனை தெரிவித்தும், நீக்கக் கோரியும் 35,646 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதர படிவங்கள் மூலமாகப் பெயர் திருத்தம் மற்றும் இடமாற்றம் கோரியும் ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலின்படி, முறையான ஆய்வுக்குப் பின் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர் மற்றும் முகவரி மாறியவர்கள் 66.44 லட்சம் பேர் அடங்குவர்.

தற்போது தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் இந்த எண்ணிக்கை உயரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
