சென்னை வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவர் நீக்கம்... பெரும் அதிர்ச்சி

 
வரைவு வாக்காளர் பட்டியல்
 

 

சென்னையில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்த நிலையில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 14,25,018 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால், முன்பு 40,04,694 ஆக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 25,79,676 ஆக குறைந்துள்ளது. சுமார் 35.58 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் தேர்தல் வாக்குப்பதிவு

நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இடம் மாறியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் மாறியோர் 12,22,164 பேர். இறந்த வாக்காளர்கள் 1,56,555 பேர். தொடர்பு கொள்ள முடியாதோர் 27,328 பேர். இரட்டைப் பதிவுகள் 18,772 என கணக்கிடப்பட்டுள்ளது. இதர காரணங்களால் 199 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல்

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெயர் இடம்பெறாதவர்கள் அச்சப்பட வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உரிய ஆட்சேபனைகளை பதிவு செய்து மீண்டும் சேர்க்க வாய்ப்பு உள்ளது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!