வாக்காளர் பட்டியல்... இன்றும், நாளையும் சிறப்பு முகாம்!

 
வரைவு வாக்காளர் பட்டியல்

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளராக சேர ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள் ஜனவரி 18 ஆகும். பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தத்திற்காக 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி முதல் கட்டமாக கடந்த சனி, ஞாயிறு முகாம் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று மற்றும் நாளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகாம் நடக்கிறது. பெயர் விடுபட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!